காலத்தின் பலனை
இயேசுவே நீரே நித்தியர்
1. காலத்தின் பலனை உள்ளத்தில் உணர்த்தும்
காலத்தின் அதிபதியே
ஞாலத்தில் எனது வாழ்க்கையாம் படகு
உம் சித்தத்தில் செல்வதாக
இயேசுவே நீரே நித்தியர்!
தேவனே நீரே நித்தியர்!
காலத்தில் அடங்கா கர்த்தனாம் தேவனே
நீரே நித்தியர்!
2. புல்லைப் போல் ஒழியும் தொல்லைகள் நிறைந்த
எம் வாழ்வு வெறும் கதையே
குமிழிபோல் தோன்றி மறைந்திடும் மாயை
உணர்த்திட உதவி செய்யும்
3. உலகத்து ஆசை மாமிசப்பற்று
சிற்றின்ப சோதனைகள்
இயேசுவே எங்களை விடுதலை செய்யும்
நித்திய வாசியாக்கும்
