காற்று வீசுதே தேசத்தின் மேலே

bookmark

காற்று வீசுதே தேசத்தின் மேலே
ஆவியானவர் வந்து விட்டாரே
 
எல்லோரும் பாடுங்கள்
களிப்பாய் பாடுங்கள்
இயேசுவைப் போற்றி
கெம்பீரமாய் பாடுங்கள்
 
1. பாசமாய் வந்தவரே நேசமாய் தேடி வந்து
   மோசமாய் வாழ்ந்த என்னை மீட்டெடுத்தீரே  (எல்லோரும்...)
 
2. பிசாசின் வல்லமைகளை அனைத்தையும் முறிந்து போட்டு
   பிதாவின் சித்தமதை முடித்து வைத்தீரே     (எல்லோரும்...)
 
3. ஏழையாய் இருந்த என்னை செல்வந்தனாக்கிடவே
   தரித்திரரானவரே ஸ்தோத்திரிப்பேனே       (எல்லோரும்...)
 
4. நரகை ஜெயித்திடவே நரர் பிணி நீக்கிடவே
   சிலுவை மீதினிலே ஜீவன் தந்தீரே         (எல்லோரும்;...)
 
5. பரலோக வாழ்வுதனை பரிசாகத் தந்திடவே
   பூலோக வாழ்வை நமக்காய் விரும்பி எற்றீரே (எல்லோரும்...)