என் ஜனமே மனந்திரும்பு

bookmark

என் ஜனமே மனந்திரும்பு
இயேசுவிடம் ஓடிவா
இறுதிகாலம் வந்தாச்சு
இன்னமும் தாமதமேன்
 
1.   உன்னை நினைத்து சிலுவையிலே
தாகம் தாகம் என்றார்
உன்னை இசட்சிக்க பாவம் மன்னிக்க
தன்னையே பலியாக்கினார்
 
2.   தூய இரத்தம் உனக்காக
தீய உன் வாழ்வு மாற
காயங்கள் உனக்காக
உன் நோயெல்லம்; தீர
 
3.   உனக்காக பரலோகத்தில்
உறைவிடம் கட்டுகிறார்
உன்னைத் தேடி வருகின்றார்
இன்று நீ ஆயத்தமா - மகனே
 
4.   உன் பாவங்கள் போக்கிடவே
சிலுவையை சுமந்தாரே
உன் சாபங்கள் நீக்கிடவே
முள்முடி தாங்கினாரே