என் உள்ளில் வாரும் இயேசுவே

bookmark

கதவைத் திறந்தால் பிரவேசிப்பேன்

   
1. என் உள்ளில் வாரும் இயேசுவே வாரும்
இன்றே நன்று செய்ய வாரும்!
வெம்புண்போல் வெடித்து
நாறிக் கிடக்கும் நெஞ்சை ஆற்றவே வாரும்!
 
தேவனே இராஜாவே இராஜாவாகவே வாரும் (2)
என் உள்ளம் இன்றே வாரும்!

2. முன் காலம் எல்லாம் ஒன்றும் செய்யாது
பாவி நானே கெட்டலைந்தேன்
காலம் சிறிதே கடமை பெரிதே
கருத்தூட்டும் இரட்சகனே
  
3. மேகங்கள் சூழ கல்லறை திறக்க
கர்த்தா நீர் வரும் அன்று
ஐயோ என்றலறி மலை குகை நோக்கி
ஓடாது காரும் என்னையே!
 
4. என் உடல்ää சக்தி  கல்வி  செல்வம் சுகம்
காணிக்கை ஏற்றருளும்
உள்ளம் உடைந்து பாதம் விழும்
இந்தப் பாவியைப் பொறுத்தருளும்