உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது
உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது
அது இனிமையானது ஏற்புடையது
1. பாடல் வைத்தீர் ஐயா
பாலகர் நாவில்
எதிரியை அடக்க பகைவரை ஒடுக்க
இவ்வாறு செய்தீரய்யா
உந்தன் திருநாமம் அது
எவ்வளவு உயர்ந்தது - (2)
2. நிலாவை பார்க்கும்போது
விண்மீன்கள் நோக்கும்போது
எi;னை நினைந்து விசாரித்து
நடத்த நான் எம்மாத்திரமையா
3. வானதூதனை விட சற்று
சிறியவனாய் படைத்துள்ளீர்
மகிமை மாட்சிமை மிகுந்த
மேன்மையாய் முடிசூட்டி நடத்துகிறீர்
4. அனைத்துப் படைப்புகள் மேல்
அதிகாரம் தந்துள்ளீர்
காட்டு விலங்குகள் மீன்கள்
பறவைகள் கீழ்படியச் செய்துள்ளீர்
