உனக்காக நான் வாழத் துடிக்கின்றேன்

bookmark

என்னுள்ளம் வரவேண்டும் இசைவேந்தனே
இதயம் மீட்டும் இசைராகமே நான் பாடும் புதுராகமே

1. கடல்கீதங்கள் உனை பாடினால் உன் கவியாக நான் மாறுவேன்
இளந்தென்றல் காற்று இசையாகினால்
என் இதழோரம் சுதி மீட்டுவேன்
அருள் தீபம் எனில் ஏற்ற உளம் வாருமே
வரம் ஈந்து எனைக் காத்து வழிகாட்டுமே
படைப்போடு நான் சேர்ந்து உனைப் போற்றுவேன்

2. பனிதூவும் இளங்காலை சிறுபூவினில்
ஒரு இதழாக நான் மாறுவேன்
நதியோரம் தலைசாய்க்கும் சிறுநாணலாய்
உன் விழியோரம் அருள் தேடுவேன்
பயிர் வாழ உரமாகும் நிலையாகவே
உயிர் வாழ உணவாக எனில் வாருமே
புது வாழ்வு நான் காண ஒளியாகுமே