உங்க கிருபை தான் என்னை தாங்குகின்றது

bookmark

உங்க கிருபை தான் என்னை தாங்குகின்றது
உங்க கிருபை தான் என்னை நடத்துகின்றது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே

உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம்
என்னை உருவாக்கின கிருபையிது   ..கிருபையே

சோர்ந்து போன நேரத்தில் எல்லாம்
என்னை சூழ்ந்துகொண்ட கிருபையிது ..கிருபையே

ஒன்றுமில்லா நேரத்தில் எல்லாம்
 எனக்கு உதவி செய்த கிருபையிது ..கிருபையே

உழியத்தின் பாதையிலெல்லாம்
என்னை உயர்த்தி வைத்த கிருபையிது ..கிருபையே