இளங்காலைப் பொழுதே என் இடம் வாருமே

bookmark

இளங்காலைக் கதிரே என் அகம் சேருமே (2)
இருள் சூழ்ந்த இடம் எங்கும் ஒளி சூழ்ந்த வேளை
ஒளியான இறைவா என் உயிராக வா (2)

1. மலர்ச்சோலை பூவெங்கும் வாழ்த்தொன்று பாட
மன்னா உன் மலர்ப்பாதம் தொழுதேன் ஐயா (2)
விண்ணாளும் தேவா வினைபோக்கும் நாதா உன்
மலர்ப்பாதம் பணிந்தேன் ஐயா - எனை
உருவாக்கி உருவாக்கி உனதாக்கும் தேவா
உன்னோடு நான் வாழும் காலம் என்னில்
இனிதான சுகம் சேர்ந்த நேரம் - இருள் சூழ்ந்த ... ...

2. இனம்புரியா இதமான சந்தோசம் உதிக்க
இனிதான எண்ணங்கள் இதமாக இருக்க (2)
உனைத்தேடி வந்தேன் உன் பதம் நாடி நின்றேன்
என் உயிரோடு உயிராக வா - எனை
உயிராக்கி உயிராக்கி உனதாக்கும் தேவா
நீயின்றி நான் ஒன்றும் இல்லை - உன்
நினைவின்றி உறவொன்றுமில்லை - இருள் சூழ்ந்த...