இறைவனைத் தொழவே அருள்தனைப் பெறவே

bookmark

இறையடி அமர்ந்திட விரைவோம் (2)
நம் இதயத்தை நிறைவாய் அவரிலே இணைத்து
இன்பத்தில் நிலைத்திட விழைவோம் (2)

1. இறைவனின் உறவில் கலந்திட
எழுவோம் இணைவோம் நம்மையே தரவே
ஆவியின் வரங்களால் நிறைந்திட
எழுவோம் இணைவோம் புதுப்படைப்பாகவே
மனிதம் மலந்திட புறப்படுவோம் -இந்தப்
பயணம் தொடர்ந்திட விரைந்திடுவோம் (2) - 2

2. மனங்களில் இறைவன் உறையவே
எழுவோம் இணைவோம் அவர் புகழ் பாடவே
மனிதரில் இறைவனைக் காணவே
எழுவோம் இணைவோம் அன்பு செய்திடவே - மனிதம் ...