இறைமக்களே கதிரோன் முகம் நோக்கும் மலராய்

bookmark

இறைவன் முன்வருவோம் (2)
திருப்பலியினில் இணைந்து பலியாகும்
இறைவன் அரசை அமைத்திடுவோம் (2)
கிறிஸ்து மரித்தார் கிறிஸ்து உயிர்த்தார்
மீண்டும் வருவார் என்றுணர்ந்தே
அகில இறைவன் அரசை அமைக்க
மீட்கும் பலியில் பங்கேற்போம்
மீட்பர் பலியில் ஒன்றிணைவோம்

1. ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்
அவரே நம்மைப் படைத்தவரே நாமோ அவர் மக்கள் (2)
ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபட வாருங்கள்
மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வருவோம் -2 (கிறிஸ்து)

2. நன்றியுடன் அவர் வாயில்களில் நுழையுங்கள்
என்றும் பேரன்பு உள்ளவரே ஆண்டவர் நல்லவரே (2)
அனைத்துலகோரே ஆர்ப்பரித்து அவரை வாழ்த்துங்கள்
எழுச்சியுடன் ஒன்றிணைவோம் நன்மையின் பலியளிப்போம்- 2