இராஜனே உம் வருகைக்கான

bookmark

விழித்திருந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்

இராஜனே உம் வருகைக்கான
காலக்குறிகள் தெரிகின்றன
இயேசுவே! நீர் வரும்போது
விழித்திருந்தவர்கள்
கொடுத்து வைத்தவர்கள்
வாரும் இயேசு வாரும்
வாரும் விரைந்து வாரும்
   
1. மரித்து உயிர்த்தவர் இன்று வருகின்றார்
என்ற நினைவுடன் தாபரிப்போம்!
மங்கள நாள் விடியும் காலை
ஏங்கும் கன்னியாய் காத்திருப்போம்!
  
2. செல்வம் எங்கோää உள்ளம் அங்கே
என்ற உண்மையை மனதில் கொள்வோமே!
விண்ணுக்குரிய மகிமை வாழ்வை
மண்ணிலே நாம் நடத்தி முடிப்போம்!
   
3. மயக்கும் உலகம் அமிழ்த்தும் மோகம்
எதிரியவனின் பொறிகள் என்போம்!
விழித்து எதிர்த்தும் விலகிவாழ்ந்தும்
வஞ்சகன் மேல் வெற்றி பெறுவோம்!
    
4. தூய உள்ளம் தூய சிந்தை
காலமெல்லாம் அணிந்திருப்போம்!
ஜோதிமங்காமல் வாழ்ந்திருந்து
தேவ இராஜியம் பெருக உழைப்போம்!
 
5. உண்மையோடு கடமை முடித்தோர்
இன்றும் என்றும் உயர்த்தப்படுவார்!
ஜெபித்தும் உழைத்தும் சிலுவை சுமந்தோர்
தேவ வருகையில் பலனடைவார்!