இயேசுவே உன் வார்த்தை ஒன்றே ஆறுதல் - 2

bookmark

இயேசுவே என் வாழ்க்கை காணும் தேறுதல் -2
பாசமே உன் நாமம் வாழ்வின் ஆனந்தம் -2
நேசமே உன் பார்வை நாளும் பேரின்பம்
ஆசையாய் நான் பாடுவேன் புது கீர்த்தனம் -2
துதிகளின் தேவனின் திருப்பெயர் பாடிப் புகழ்வோம் மானிடரே
நல்லவர் தேவனின் வல்லமை பாடிப் புகழ்வோம் மானிடரே
ஆறுதல் தேறுதல் இயேசுவே உன் வார்த்தை

1. வாய்மையும் நேர்மையும் எனக்கரணாகும்
என்னோடு நீயிருக்க (2)
வாழ்விலும் தாழ்விலும் நம்பிக்கையாலும்
உன்னோடு நான் நடக்க (2)
ஆழ்கடல் கடந்தேன் பாழ்வெளி நடந்தேன்
தோள்களில் சுமந்து சென்றீர் (2)
பேரிடர் நேரம் பெருமழைக்காலம் உயிரினைக் காத்துநின்றீர்-2
ஆண்டவரே என் ஒளியாகும் அவரே எனது மீட்பாகும் -2
உயிருக்கு அடைக்கலம் அவரிருக்க
யாருக்கு அஞ்சி நான் நடுங்க வேணும் (2)

2. தீயோர் வளமுடன் வாழ்வதைக்கண்டு
தினம் மனம் வெதும்பமாட்டேன் (2)
காலடிச் சுவடுகள் கவனித்துக் கொள்வார்
கலக்கங்கள் கொள்ள மாட்டேன் (2)
நன்மைகள் நிறைத்து தீமைகள் தகர்த்து
புகலிடம் அடித்திடுவார் (2)
வாழ்வோர் நொடியில் கடவுள் திருமுன்
நாள்தோறும் நடத்திடுவார் -2 ஆண்டவரே ... ...