இயேசுவின் வருகைக்குப் பாலம் அமைப்போம்

bookmark

இயேசுவின் வருகைக்குப் பாலம் அமைப்போம்
பரிசுத்தப் புரட்சிக்கு வழி வகுப்போம்
பாரதத்தின் புதல்வரை விரைந்து மீட்போம்
இயேசுவின் ஆட்சியில் வர உழைப்போம்
  
1. பாரதத்தில் வாழும் ஜனங்கள் .. இன்று
சிலுவைப் பக்கம் வந்திட வேண்டும்
கர்த்தரே தெய்வமென்று பரவட்டுமே
நித்தமும் சேவிப்போர் பெருகட்டுமே
  
2. இயேசுவை நம்பும் யாவரும் - அவர்
இனிய செய்தி கூறிட வேண்டும்
இயேசுவே நங்கூரம் வேறு வழி இல்லை
நற்செய்தி கூறுவோம் தேசமெங்கிலும்
  
3. செயல்வீரர் வாலிபனே வா .. இயேசு
தளபதி அழைக்கிறார் வா
புதியதோர் பாரதம் படைத்திடவா
எழுந்து வா விரைந்து வாää செயல்பட வா