இயேசுவின் அடிச்சுவட்டில் நடப்போம்

bookmark

புதிய சமுதாயம் அமைப்போம்

இயேசுவின் அடிச்சுவட்டில் நடப்போம்
இனிய சமுதாயம் அமைப்போம்
   
1. சுயவெறுப்பென்னும் எல்கைக்குச் செல்வோம்
சுத்த சுவிசேஷம் பாரெங்கும் உரைப்போம்
ஆசைகள் அனைத்தையும் அடியோடு அழிப்போம்
பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம்
   
2. போட்டி பொறாமைகள் புழுதியில் மாய்ப்போம்
புதிய சமுதாயம் மலர்ந்திட உழைப்போம்
சீடராய் வாழ்ந்திட யாவரும் முயல்வோம்
பரன் இயேசு பவனிக்கு பாதைகள் அமைப்போம்
   
3. பொறுப்போடு வாழ்ந்திட பொருத்தனை செய்வோம்
புவிமீது நமக்கேதும் பிடிப்பில்லை என்போம்
பரலோகில் நமக்காய்ப் பொருள்கோடி சேர்ப்போம்
பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம்
    
4. அன்பெனும் பண்பிலே அவரைப் போலாவோம்
ஆண்டவர் அழகினை அகத்தினில் பெறுவோம்
பிறருக்காய் வாழ்வதே பாக்கியம் என்போம்
பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம்