இயேசு அழைக்கிறார்

bookmark

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே
இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
      (இயேசு அழைக்கிறார்;.......)

எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்(1)
என்றுணர்;ந்து நீ இயேசுவை நோக்கினால்
எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய்
      (இயேசு அழைக்கிறார்;.......)

கண்ணீரெல்லாம் துடைப்பார்கண்மணி போல்க் காப்பார்(1)
கார்;மேகம் போன்ற கஸ்டங்கள் வந்தாலும்
கருத்துடன் உன்னைக் காத்திடவே
      (இயேசு அழைக்கிறார்;.......)

சோர்;வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார்(1)
அவர்உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்
தாமதமின்றி நீ வந்திடுவாய்
      (இயேசு அழைக்கிறார்;.......)

சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம் (1)
யாராய் இருந்தாலும் பேதங்கள் இன்றியே
கிருபையால் அன்பை அளித்திடவே
      (இயேசு அழைக்கிறார்;.......)