இமய முதல் குமரி வரை

bookmark

இமய முதல் குமரி வரை

   
1. இமய முதல் குமரி வரையுள்ள
இதயங்கள் விடுதலைக் காணவே
இயேசென்னும் தீபம் ஏற்றுவோம்
இளைஞரே எழுந்து செல்வோம்
செல்லுவோம் சேனை வீரராய்
வெல்லுவோம் தேவ அருளால்
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! - 2
  
2. ஆண்டுகளாய் ஜனங்களெல்லாம்
அறியாமை இருட்டினில் வாழ்கிறார்
இயேசுவின் விடுதலைக் கூறுவோம்
பாரெங்கும் புகுந்து செல்லுவோம்
சுடராய் வாழந்திடுவோம்
சபையை பெருக்கிடுவோம்
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! - 2
  
3. என் பெயரை சொல்லி அழைத்த
உன்னத தேவன் நீரன்றோ
உன்னோடே கூட வருவேன் என்றீர்
ஆவியால் நிறைத்திடுவீர்
வரங்கள் உவந்தளிப்பீர்
கனியால் அலங்கரிப்பீர்
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! - 2