ஆவலுடன் நான் ஆண்டவர்க்காக காத்திருந்தேன்

bookmark

அவரும் என்னை கனிவாக கண்ணோக்கினார் - 2

1. என் குரலுக்கு அவர் செவிகொடுத்தார்
எழுந்திட எனக்கவர் கைகொடுத்தார்
பாறையில் கால்களை ஊன்றச் செய்தார்
பாதையில் துணை வரும் காவலானார்

2. நாளும் இறைபுகழ் இசைத்திடவே
நாவில் வைத்தார் புதுப்பாடல்
கண்டு கலங்கிய அனைவருமே
கடவுளை நம்பி மகிழ்வுற்றார்

3. உம்மைத் தேடும் அனைவரையும்
அன்பில் வேரூன்றி நிற்கச் செய்யும்
விடுதலை வழங்கும் துணை நீரே
விரைவாய் இறைவா வருவீரே