ஆண்டவர் தமது மக்களுக்கு

bookmark

அமைதி அளித்து ஆசீர்வதிப்பார் (2)

1. இறைவனின் மைந்தரே மாட்சியையும் வலிமையையும்
ஆண்டவர்க்கு உரியது ஆக்குங்கள்
ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை அவருக்குரியதாக்குங்கள்
என்றென்றும் தூய மாட்சியில் இலங்கும்
ஆண்டவரை என்றும் வழிபடுங்கள்

2. ஆண்டவர் குரல் கடல் மேல் ஒலிக்கின்றது
நீர்த்திரள் மேல் வீற்றிருக்கின்றார் (2)
ஆண்டவர் நம் ஆண்டவர் ஆண்டவரின் குரல்
வலிமை மிக்கது வலிமை என்றும் மிகுந்தது
ஆண்டவரின் குரல் மாட்சி மிக்கது மாட்சிமை என்றும் மிகுந்தது