ஆண்டவரின் சந்நிதியில் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்

bookmark

மாண்புமிக்க வான்தளத்தில் அவரைப் புகழ்ந்து ஏத்துங்கள் (2)
விண்ணோர் போற்றும் பரிசுத்தர் உலகை மீட்கும் இரட்சகர் -2

1. எக்காளத்தை ஊதுங்கள் அவரைப்புகழ்ந்து பாடுங்கள்
வீணையுடன் யாழிசைத்து அவரைப் புகழ்ந்து ஏத்துங்கள் (2)
வாருங்களே அவரைப் பாடுங்களே - 2

2. முரசுகொட்டிப் பாடுங்கள் நடனமாடிப் போற்றுங்கள்
இசைமீட்டி குழலூதி அவரைப் புகழ்ந்து ஏத்துங்கள் (2)
வாருங்களே அவரைப் பாடுங்களே -2