அமைதியின் தூதனாய் என்னை அளிக்கின்றேன் இறைவா

bookmark

உந்தன் கருவியாய் எனை மாற்றும்
உந்தன் சாட்சியாய் உருமாற்றும்
உறவின் பாலமாய்ப் பயன்படுத்தும்

1. எங்கே பகைமை நிறைந்துள்ளதோ
அங்கே உறவை வளர்த்திடுவீர்
எங்கே தீமை நிறைந்துள்ளதோ அங்கே அன்பை வளர்த்திடுவீர்
நீதியின் பாதையிலே மக்கள் யாவரும் நடந்திடவே
நிலையில்லா வாழ்வினிலே நல் உணர்வினில் வளர்ந்திடவே
எம்மை கருவியாய்ப் பயன்படுத்தும்

2. எங்கே இருள் சூழ்ந்துள்ளதோ அங்கே ஒளியை ஏற்றிடுவீர்
எங்கே கவலை நிறைந்துள்ளதோ
அங்கே மகிழ்வை விதைத்திடுவீர்
உறவுகள் செழித்திடவும் இங்கு உண்மைகள் வலுப்பெறவும் -2
எம்மை உம் கருவியாய் பயன்படுத்தும்