அன்பார்ந்த நெஞ்சங்களே
அன்பார்ந்த நெஞ்சங்களே பரிசுத்த உள்ளங்களே
இயேசுவின் சீடர்களே தேவனின் சாட்சிகளே
1.சுடராக வாழ்ந்திடுவோம் - அன்பின்
சொரூபி நம் இயேசுவைப்போல்
ஒன்றாக வாழ்ந்திடுவோம் - என்றும்
தேவனின் புகழ்பாடுவோம்
2.தேவனால் தகுதி பெற்றோம் முழு
தேசத்தை சுதந்தரிப்போம்
ஆவியின் வரமளித்தார் - தேவ
சாயலை அணிந்திருப்போம்
3.இயேசுவே உலகத்தின் தேவன் .. இதை
ஒருவருக்கும் மறைக்காதீர்
செல்லுங்கள் அகிலமெல்லாம் - தேவ
இராஜ்ஜியம் பெருகிடவே
