அசைவம்
அசைவ உணவு சாப்பிடுபவர்கள் வறுத்த மீன், இறால், ஆட்டிறைச்சி, கோழி நெஞ்சுக்கறி, சிவப்பு இறைச்சி போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவும். குறிப்பாக தினமும் முட்டை சாப்பிடுவது நல்லது. முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் கொழுப்பு அதிகமாக உள்ளது. கலோரிகளும் நிறைந் திருக்கிறது. தினமும் இரண்டு முட்டையை தவிர்க்காமல் எடுத்துக்கொள்ளுங்கள்.பிராய்லர் கோழியை விட நாட்டு கோழியில் பலன் விரைவாக கிடைக்கும் ஆற்றலோடு கிடைக்கும் . முட்டையை வேகவைத்து எடுத்தால் வாய்வுவை உண்டாக்கும் என்று நினைப்பவர்கள் முட்டை யுடன் வெங்காயம் கலந்து ஆம்லெட் அல்லது பொரியலாக்கி சாப்பிடலாம்.இவை தவிர உருளைக்கிழங்கு, காய்கறிகள், பழங்கள்,உலர் பருப்புகள் போன்றவற்றையும் அதிக மாக சேர்த்துகொள்ளலாம். இவை எல்லாமே உங்கள் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்க உதவும்.
