வல்லமை நிறைந்த சீடர்களே
வல்லமை நிறைந்த சீடர்களே
1. வல்லமை நிறைந்த சீடர்களே - திரு
வாக்கை உரைத்திட கூடுங்களேன்
உலகினைக் கலக்கும் ஊழியரே - நீங்கள்
உள்ளத்தில் அனல் கொண்டு வாழுங்களேன்
பரனாவி வரம் பெற்ற நிருபங்களே
எனக்குச் சாட்சிகள் நீங்களே
2. இயேசு இராஜாவின் சேனையரே - நீங்கள்
தீவிர திருப்பணி செய்திடுங்கள்
முடிவின் காலத்து நோவாக்களே
பரலோகத்தை ஜனத்தால் நிரப்பிடுங்கள்
தீவட்டியோடே புறப்படுங்கள்
எங்கும் இயேசுவை முழங்கிடுங்கள்
3. பாரெங்கும் நற்செய்தி தூது சென்றே - உங்கள்
பாவம் தொலைந்ததென்று கூறுங்களேன்
சபைதனை ஊரெங்கும் எழுப்பிடுங்கள்
பரிப10ரண வாழ்வுக்கு வழி சொல்லுங்கள்
மகிமையின் தேவனில் களி கூருங்கள்
மகிழ்ந்தே அவர் பின் செல்லுங்கள்
