முடிவில்லா நித்திய ஜீவனை

bookmark

முடிவில்லா நித்திய ஜீவனை
முடிவில்லாதவர் உனக்களிப்பார்

 சத்திய பாதையில் அவருடன் நடந்தால்
 நித்திய ஜீவனை நீ பெறுவாயே

கண்டிடுவாய் நீயும் இன்பக் கானானை
சேர்ந்திடுவாய் அங்கு இயேசுவுடன்
கீதங்கள் பாடி மகிழ்வுடன் ஆடி
நாதனை நிதம் துதி செய்திடுவாய்

பரமனின் பாதம் பற்றியே நடந்தால்
வரங்களின் ஆசீர் அளித்திடுவார்
கரங்களினால் உன்னை அணைத்திடுத்தே
பரன் அவர் என்றென்றும் வாழ வைப்பார்