மாபெரும் அறுவடை ஒன்று
ஏறெடுத்துப் பாருங்கள்
மாபெரும் அறுவடை ஒன்று கண் எதிர் தெரிகின்றது
காத்திருக்கும் சபை சாட்சி பெறும் .. இயேசு
வீற்றிருக்கும் சபை சாட்சி சொல்லும்
1. கோடிக்கோடியாக மக்கள் உண்டு
உடல் உள்ளம் இரண்டிலும் தேவைகொண்டு!
ஓடி ஓடிச் செய்ய இடமும் உண்டு
பெரும் பாரதம்! பெரும் பாரதம்!
2. சத்தியம் பெற்றவர் கூறாவிட்டால்
சுபநித்திய பாக்கியம் யார் பெறுவார்?
தொண்ணூற்று ஆறு ஐந்து கோடி உண்டு
பெரும் பாரதம்! பெரும் பாரதம்!
3.அன்பெனும் சங்கிலி கைகள் கட்ட
சபை சங்கத்தின் பலகைகள் ஓடிவிட
இயேசுவின் நாமம் உயர்த்தப்படும்
பெரும் பாரதம்! பெரும் பாரதம்!
4.மிஷனெரிச் சபைகள் தோன்றும் காலம்
சுவிசேஷம் சொல்ல இது வசந்த காலம்
தயங்கினால் சந்தர்ப்பம் கைநழுவும்
பெரும் பாரதம்! பெரும் பாரதம்!
5.உமக்காக உழைத்திடும் பக்தர் வாழ்க!
உம் பணிக்காகக் கொடுத்திடும் மக்கள் வாழ்க!
அனைத்து உள்ளத்திலும் இயேசு வாழ்க
பெரும் பாரதம்! பெரும் பாரதம்!
