மறந்திடாதே நீ மன்னவன் இயேசுவின்

bookmark

இயேசுவை எங்கும் கூறுவோம்

மறந்திடாதே நீ மன்னவன் இயேசுவின்
மாண்பினைக் கூற மறந்திடாதே நீ

    

1. பாலைவனமதில் வாழுகின்றார் - சிலர்
பட்டண வீதியில் அலைகின்றார்
பார் புகழும்படி வாழுகின்றார் - சிலர்
பகலிரவெதிலும் உழைக்கின்றார் .. இவர்களை

    

2. வானமெட்டும் வண்ண மாளிகையில் - சிலர்
வானரம் வாழ்ந்திடும் கானகத்தில்
வற்றா நதிகளில் மீன் பிடிப்பார் - சிலர்
வயல் வெளிகளில் பயிரிடுகின்றார் .. இவர்களை

      

3. பற்பல தேசத்தில் வாழுபவர் - பலர்
அற்புத அன்பினை அறியாரே
அத்தனை பேருமே அறிந்திடவே - தினம்
அறிவிக்க இயேசுன்னை அழைக்கின்றார் .. இவர்களை