மனம் மகிழ இயேசுவே நாடு
மனம் மகிழ இயேசுவே நாடு
மாந்தரின் துன்பங்கள் தீர்ப்பவரே
குணமாக்கும் தழும்புகள் கண்டிடுவாய்
குருசின் காட்சியை அண்டிடுவாய்
தடுமாறும் உள்ளங்கள் திகழ்ந்திடவே
தற்பரன் பாடுகள் ஏற்றனரே
நெருக்கப்பட்டார் நமக்காய் ஒடுக்கப்பட்டார்
வாய் திறவாமல் அன்று பொறுத்து நின்றார்
இடுக்கண்களiல் உன்னைக் காத்திடவே
இயேசுவே சிலுவையில் அறையப்பட்டார்
துன்மார்க்கரோடு தாழ்த்தப்பட்டார்
ஐஸ்வரியமுள்ளோராய் உயர்த்தப்பட்டார்
கொடுமை செய்யாதவர் கைவிடாரே
கர்த்தரின் அன்பை ருசிப்பாயோ
