மகிழ்ந்து களிகூறுங்கள்

bookmark

மகிழ்ந்து களிகூறுங்கள்
இயேசு ராஜன் பிறந்ததினால்      
மகிழ்ந்து களிகூறுங்கள்

 விண்ணுலகம் துறந்து         
மண்ணுலகம் உதித்து
தம்மைத்தாமே வெறுத்து அவர்      
நம்மை மீட்க வந்தார்

மகிழ்ந்து…….

பாவம் அறியா அவரே            
ஜீவன் தந்திடவே
நித்ய வாழ்வு நமக்களிக்க        
இயேசு ராஜன் பிறந்தார்

மகிழ்ந்து…….

வாழ்ந்து காட்டிய வழியை           
மகிழ்ந்து பின்பற்றியே
வேறு பலரை அவர் மந்தையில்       
இணைத்துப் பலன் அடைவோம்

மகிழ்ந்து…….