போராடும் என் நெஞ்சமே

bookmark

போராடும் என் நெஞ்சமே
புகலிடம் மறந்தாயோ
பாராளும் இயேசு உண்டு
பதறாதே மனமே
 
1.   அலைகடல் நடுவினிலே
      அமிழ்ந்து போகின்றாயோ
      கரம் நீட்டும் இயேசுவைப் பார்
      கரை சேர்க்கும் துணை அவரே..

      ஆ... ஆனந்தம் பேரானந்தம்
       என் அருள்நாதர் சமூகத்திலே (2)  - போராடும்
 
2.   கடந்ததை நினைத்து தினம்
      கண்ணீர் வடிக்கின்றாயோ
      நடந்ததெல்லாம் நன்மைக்கே
      நன்றி நன்றி சொல்லு    

  ஆ...ஆனந்தம் பேரானந்தம்
   என் அருள்நாதர் சமூகத்திலே (2)  - போராடும்
 
3.   வருங்கால பயங்களெல்லாம்
      வாட்டுதோ அனுதினமும்
      அருள்நாதர் இயேசுவிடம்
      அனைத்தையும் கொடுத்துவிடு

  ஆ... ஆனந்தம் பேரானந்தம்
  என் அருள்நாதர் சமூகத்திலே (2)  - போராடும்
 
4.   நண்பன் கைவிட்டானோ
      நம்பினோர் எதிர்த்தனரோ
      கைவிடா நம் தேவனின்
      கரம் பற்றி நடத்திடு

  ஆ... ஆனந்தம் பேரானந்தம்
  என் அருள்நாதர் சமூகத்திலே (2)  - போராடும்