பூரண வாழ்க்கையே

bookmark

1. பூரண வாழ்க்கையே!
தெய்வாசனம் விட்டு,
தாம் வந்த நோக்கம் யாவுமே
இதோ முடிந்தது!

2. பிதாவின் சித்தத்தை
கோதற முடித்தார்
தொல் வேத உரைப்படியே
கஸ்தியைச் சகித்தார்.

3. அவர் படாத் துக்கம்
நரர்க்கு இல்லையே:
உருகும் அவர் நெஞ்சிலும்
நம்துன்பம் பாய்ந்ததே.