பிரமிக்கும் விதமாகச் செயலாற்றும் கர்த்தர்

bookmark

வெற்றிக்குத் தலைவர் இயேசு

பிரமிக்கும் விதமாகச் செயலாற்றும் கர்த்தர்
யுத்தத்தின் தளகர்த்தர்
ஆறு இலட்சம் எபிரேயர் முன் சென்றவர்
வெற்றிக்குத் தலைவரவர் - 2

          

1. ஆகாயப்பிரபுவோடு போராட்டமே
தேவாதி தேவன் நம் பக்கத்திலே
ஜெபிக்காமல் ஜெயமில்லை போர்களத்திலே - நாம்
எதிராளியின் குலை நடுங்கும் பயத்தினிலே... பயத்தினிலே

          

2. எதிரியவன் எய்கின்ற பாணங்களை
பதிவிருந்து தாக்கிடும் அவன் தந்திரத்தை
முறியடிப்பார் சிதறடிப்பார் கொடியேற்றுவார் - நாம்
துதிபாடி கருத்தூன்றி ஜெபிக்கையிலே... ஜெபிக்கையிலே
           

3. ஜெபிக்காமல் கொடுப்பவர்கள் பலபேர் இன்று
கொடுக்காமல் ஜெபிப்பவர்கள் சில பேர் உண்டு
ஜெபத்தோடு கொடுப்பவர்கள் மேலானவர் - நல்
சுவிசேஷ ஊழியத்தில் பங்காளிகள்... பங்காளிகள்