பாவம் பெருகுதே பாரும்

bookmark

இயேசுவே இரட்சியும்

பாவம் பெருகுதே பாரும் பரன் இயேசுவே
அழியும் மனுக்குலம் அதையும் இரட்சிப்பீரே

      

1. ஆத்தும ரட்சிப்பிழந்தவர் ஆயிரமாயிரமாய்
அன்றாடகம் இந்த மண்ணடியில் அழிந்து சாகின்றாரே

          

2. இரட்சிப்பின் நற்செய்தி கேட்பவர் எச்சரிப்பை வெறுத்து
இரட்சகர் இயேசுவை இழந்தோராய் இன்றும் கெட்டழிகின்றார்.

          

3. தானியேல் போல ஜெபித்திடும் தாசர் பலர் மறைந்தார்
திறப்பின் வாசலில் நிற்கும் சிலர் தூங்கிக் களைத்துப் போனார்

          

4. ஜீவனை வெறுத்துத் தியாகமாய் சேவையும் செய்திடுவேன்
ஜீவனுக் கீடாக ஜனங்களை ஜீவ தேவன் தருவார்