நீரே என் கன்மலை

bookmark

நீரே என் கன்மலை
நீரே என் அடைக்கலம்
நான் நம்பும் துருகமும்
நீரே என் இரட்சிப்பு

நீரே என் தஞ்சமே
என் இரட்சன்ய கொம்புமே
நான் தங்கும் கோட்டையும்
நீரே என் கேடகம்
நீரே என் தேவனே

திராட்சை செடி நீர் நான் கொடி
உம் தயவால் வரும் என் கனி
உம்மைப் போல் நான் மாறவே
உம்மில் நான் நிலைத்திருப்பேன்

தந்தை போல் என்னை நேசித்தீர்
தாயைப் போல் என்னை தேற்றுவீர்
மேய்ப்பனை போல் நடத்துவீர்
இயேசுவே பலப் படுத்துவீர்

வாசல் நீரே வழியும் நீர்
சத்யம் நீரே ஜீவன் நீர்
இருளை வெளிச்சமாய் மாற்றுவீர்
என் விளக்கை நீர் ஏற்றுவீர்