நான் உம்மை உறுதியாக

bookmark

இயேசு சமாதானம் அருளுவார்

நான் உம்மை உறுதியாக என்றென்றும் பற்றிடுவேன்
சமாதானம் பூரணமாய் அளித்து என்றும் நடத்துவீர்

   

1. உன் ஆத்துமாவின் வாஞ்சை நீர் என் ஆவி உம்மைத் தேடும்
உந்தனின் பாதையில் செம்மையாய் நடத்துவீர்

   

2. என் வாசல்கள் திறந்திட உம் தாசர் உள்ளே செல்வார்
சத்தியம் காத்திட கர்த்தரே அருள் செய்வார்

    

3. உம் நியாயங்கள் நிறைவேறும் உம் வேளைக்காக வந்தோம்
தேவனே இராஜனே ஜெயமதைத் தந்திடுவீர்

   

4. என் கிரியைகள் அனைத்துமே நீர் ஏற்று என்றும் காப்பீர்
நடத்தியே தாங்குவீர் சமாதானம் அருளுவீர்

 

5. உம் கைகள் எமக்காய் ஓங்கிட உம்வல்லமை விளங்கும்
உம்மையே சார்ந்துமே உம் புகழ் சாற்றிடுவோம்