நன்றியால் துதிபாடு - நம் இயேசுவை

bookmark

    நன்றியால் துதி பாடு
    உன் யேசுவை உள்ளத்தால் என்றும் பாடு
    வல்லவர் நல்லவர் போதுமானவர்
    வார்த்தையில் உண்மையுள்ளவர்         - நன்றியால்

1.  எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
    இயேசு உந்தன் முன்னே செல்கிறார்
    கலங்கிடதே திகைத்திடாதே
    துதியினால் இடிந்து விழும்             - நன்றியால்

2.  துன்மார்க்க ஏதுவான வெறி கொள்ளாமல்
    தெய்வ பயத்தோடு என்றுமே
    ஆவியினால் என்றும் நிறைந்தே
    சங்கீத கீர்த்தனம் பாடு                - நன்றியால்

3.  சரீரம், ஆத்துமா, ஆவியினாலும்
    சோர்ந்து போகும் வேளையில் எல்லாம்
    துதி சத்ததால் உள்ளம் நிறைந்தால்
    தூயரின் பெலன் கிடைக்கும்           - நன்றியால்