தெய்வத்துவத்தின் பரிபூரணம்

bookmark

மேலானவைகளை நாடுவோம்

தெய்வத்துவத்தின் பரிபூரணம் எல்லாம்
இயேசுவில் இருக்கக்கண்டோம்
அவருக்குள் ஞானம் மீட்பு தூய்மை
பொக்கிஷவைப்பாய் கண்டோம்

 1. விசுவாசத்தில் மெத்த உறுதிப்படுவோம்
இயேசுவின் சாயலை அணிந்திருப்போம்
அவரோடும் மரித்துயிர்த்தெழுந்தே
மகிமையாய் மலர்ந்திருப்போம்
மேலானவைகளை நாடுவோம்
மேலோகவாசிகளாய் இருப்போம் - அவரோடு

 2. இயேசுவை எந்நாளும் சேவிப்போம்
வேதத்தின் முன்னே நடுங்கி நிற்வோம்
சொல் செயலாலும் அனதினவாழ்வில்
கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்
மேலானவைகளை நாடுவோம்
மேலோகவாசிகளாய் இருப்போம் - சொல் செயல்

 3. ஞாலமெங்கும் தேவதூது சொல்வோம்
ஞானமாய் காலத்தை செலவழிப்போம்
ஜெபதூபம் ஸ்தோத்திரத்தோடே
ஜெயமாக வாழ்ந்திருப்போம்
மேலானவைகளை நாடுவோம்
மேலோகவாசிகளாய் இருப்போம் - ஜெப தூபம்