துன்பமான வேளையில்

bookmark

துன்பமான வேளையில் இன்பமானவேளையில்
கஷ்டமான பாதையில் களிப்பானநேரத்தில்
என் இயேசு என்னோடு இருக்கின்றாரே
அவரே என் கன்மலை என் கோட்டையுமானார்
எந்தன் இயேசுவே -3
 
1. நான் நம்பும் கன்மலை என்றும்
   அவரை நான் சார்ந்திடுவேன்
   அவரை நான் என்றும் சார்ந்திடுவேன்... (3)
 
2. கலங்கினவேளையில் கண்ணீர்மத்தியில்
   வியாதியின் பாதையில் புலம்பலின் நேரத்தில்
   அழாதே என் மகனே, உன்னை விடுவிப்பாரே
   நீ நம்பும் தேவன் உன்னை கைவிடாரே
   எந்தன் இயேசுவே -3      (நான் நம்பும்)
 
3. ஊழியப்பாதையில் சோர்வானநேரத்தில்
   பணக்கஷ்டம் வந்தாலும், சபைவளராவிட்டாலும்
   திடன்கொள் மனமே கலங்கிடாதே
   உன்னை அழைத்தவர் உன்னை காத்திடுவார்
   எந்தன் இயேசுவே -3      (நான் நம்பும்)