துதிகள் எங்கள் அர்ச்சனைப் பூக்கள்

bookmark

துதிகள் எங்கள் அர்ச்சனைப் பூக்கள்
துதிகள் எங்கள் அர்ச்சனைப் பூக்கள்
தோத்திரங்கள் வாசனை தூபம்
கேட்போர் பயந்து நடுங்கிடுவார்
கர்த்தர் தான் மெய்தேவன் என்பார்

 1. கர்த்தர் எனது நம்பிக்கை அவர் செயல்கள் அதிசயம்
அவரது யோசனை ஆயிரம் விவரிக்க முடியாது
எண்ணில் அடங்காது இதை நம்பினால் பாக்கியம்

 2. கர்த்தர் எனது மகிமை அவர் கட்டளை உன்னதம்
நெஞ்சம் எல்லாம் நிறைந்திடும் செய்வதெல்லாம் வாய்க்கும்
கேட்பதெல்லாம் கிடைக்கும் இது எந்தனின் சுதந்திரம்

3. கர்த்தர் எனது பிரியம் என் நினைவாய் இருப்பவர்
நானோ சிறுவன் எளியவன் எனக்கும் வாழ்வளித்தார்
என்னை உயர்த்தினார் இதை எப்படி சொல்லுவேன்?