திறப்பின் வாசலில் நிற்கும் மனிதனை

bookmark

திறப்பில் நிற்போர் யார்?

திறப்பின் வாசலில் நிற்கும் மனிதனை
தேடினேன் எங்கும் காணவில்லை
தனக்காய் வாழ துடிக்கும் மனிதர்கள்
தரணியில் எங்கும் குறைய வில்லை

   

1. தாழ்மை தேவனின் தாகமறிய
முனையும் தேவ மனிதர் எங்கே
இருளில் வாழும் இந்திய மனிதரை
விரைந்து மீட்கும் இளைஞர் எங்கே

   

2. மண்ணில் வாழும் கொஞ்ச நாட்களை
மதித்து வாழ முனைபவர் யார்
மகிமை இழந்து மாளும் மனிதரை
கிறிஸ்து சமூகம் இணைப்பவர் யார்

    

3. குற்ற உணர்வு முற்றும் நீங்கிய
குயவன் கரத்தின் களிமண் யார்
கனமாய் உழைக்கும் பாத்திரமாக
வனைய கொடுப்பவர் நம்மிலே யார்