திரும்பி வந்தான்
திரும்பி வா!
திரும்பி வந்தான் திரும்பி வந்தான் நீயும் வா!
திரள் பாவம் சுமந்தாலும் நீயும் வா
மனந்திரும்பும் ஒரு பாவி நிமித்தமே
பரலோகில் கோலாகலம் என்றுமே!
1. போகும்போது இன்பம்தான் அவனிலே
தகப்பன் சொத்து பாதி அவன் கையிலே
கனவில் கண்ட வாழ்வெல்லாம் விரைவிலே
அனுபவித்தான் தடையின்றி வாழ்விலே
2. சொந்தம் பந்தம் விட்டுச் சென்றான் ஊரிலே
தகப்பன் வீட்டை மறந்து சென்றான் தூரமே
மனம்போன போக்கெல்லாம் போகவே
மீண்டும் வர மனமில்லை அவனிலே
3. திரள் சொத்தும் கையைவிட்டு ஓடவே
தேசத்திலே பஞ்சநிலை பெருகவே
பசி தீர தவிடுகூட இல்லையே
பிறந்த வீட்டை நினைத்துப் பார்த்தான் மனதிலே
4. வீடு நோக்கி வாழ வந்த மகனையே
காத்திருந்த தகப்பன் கண்டான் தொலைவிலே
ஓடிவந்து தழுவிக் கொண்டான் நெஞ்சிலே
உணர்ச்சி பொங்க மகிழ்ந்திருந்தான் முடிவிலே
