திருக்கோவையார் என வழங்கும் திருச்சிற்றம்பலக்கோவையார்

bookmark

(மாணிக்க வாசக சுவாமிகள் அருளிச்செய்தது)
கட்டளைக் கலித்துறை யாப்பு

விநாயகர் வணக்கம்

எண்ணிறைந்த தில்லை எழுகோ புரந்திகழக்
கண்ணிறைந்து நின்றருளும் கற்பகமே - நண்ணியசீர்த்
தேனூறு செஞ்சொல் திருக்கோவை என்கின்ற
நானூறும் என்மனத்தே நல்கு

1

நூற்சிறப்பு
ஆரணங் காணென்பர் அந்தணர்; யோகியர் ஆகமத்தின்
காரணங் காணென்பர்; காமுகர் காமநன் னூலதென்பர்;
ஏரணங் காணென்பர் எண்ணர் எழுத்தென்ப இன்புலவோர்;
சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே.

2

இவ்விரண்டு செய்யுட்களும் பிற்காலத்து ஆன்றோரால் செய்யப்பட்டன என்பர்.