தரணியில் மலரட்டும் இயேசுவின் ஆட்சி

bookmark

இயேசுவின் ஆட்சி மலரட்டும்

தரணியில் மலரட்டும் இயேசுவின் ஆட்சி
தலைமுறை தலைமுறை தொடரட்டும் மீட்சி
புறப்படு நீ திருச்சபை செயல்படு நீ அதி விரைவே
அறுவடை மிகுதி ஆளில்லையே - 2

   

1. இந்திய மண்ணில் எண்ணற்ற கோடி
எங்கெங்கோ அலைகிறார் இறைவனைத் தேடி
சிந்தையில் கலக்கம் மனதினில் மயக்கம்
அங்கங்கே தவிக்கிறார் அமைதியைத் நாடி
 
இந்த நிலை நீக்கவேண்டும் விந்தை ஒளி ஈர்க்கவேண்டும்
மந்தைக்குள் பலரைச் சேர்க்கவேண்டும் - 2

 

2. இமயத்தில் துவங்கி குமரி வரையில்
இம்மானுவேலனை வணங்கிடவேண்டும்
சமயங்கள் பலவும் சகலமும் படைத்த
சர்வாதி கர்த்தரைப் பணிந்திடவேண்டும்
 
பாரதமே மாறவேண்டும் பரனேசுவைச் சேரவேண்டும்
பரிசுத்த ஆவியின் மாரி வேண்டும் - 2

    

3. ஞாலத்தில் முழுதும் நற்செய்தி பரவும்
வேளைதான் முடிவின் அடையாளம் தெளிவாய்
காலத்தை உணர்வோம் கடுமையாய் உழைப்போம்
கர்த்தரின் வருகை நெருங்குதே விரைவாய்
 
அழைப்பின் குரல் கேட்கலையோ அவசரமும் புரியலையோ
அவகாசம் முடிந்தது கிளம்பலையோ - 2