தந்தையே உம் பிள்ளையாய் நான்
தந்தையே உம் பிள்ளையாய் நான்
வாழ்ந்திட ஆசை - ஐயா
உந்தன் சித்தம் அனுதினமும்
செய்திட ஆசை (தந்தையே)
எந்தன் ஆத்மா சரீரமும் உம்
சொந்தம் தானய்யா - ஐயா (எந்தன்)- உந்தன்
ஆவியாலே அபிஷேகித்து
ஆண்டுகொள்ளய்யா - உந்தன் (ஆவியாலே)
(தந்தையே)
திக்கற்றோர்க்கும் திடனற்றோர்க்கும்
ஆறுதல் செய்யும் - ம்..ம்.. (திக்கற்றோர்) - உந்தன்
வல்லகரத்தின் கருவியாக
ஆண்டுகொள்ளய்யா - உந்தன் (வல்லகரத்தின்)
(தந்தையே)
விந்தை உந்தன் அன்புக்கீடாய்
என்னைத் தந்தேனே - ஏ..ஏ.. (விந்தை)- ஐயா
எந்தையே உம் பாதம் சேர்ந்தேன்
தஞ்சம் நீரய்யா - ஐயா (எந்தை)
(தந்தையே)
