சின்ன சின்ன பூக்கள் சிரிக்குது

bookmark

எங்கும் சிங்காரமாய் வண்டு பாடுது (2)
என்ன நினைத்து இந்த இன்ப அலையோ - 2
மன்னன் இன்று வந்த இரவில்

1. நெஞ்சில் உனக்கோர் இடம் தந்து ரசிப்பேன்
பூபாளம் உனக்காய் நான் பாடுவேன் (2)
எந்தன் விழி வாசலிலே நான் உனக்காய் காத்திருப்பேன் (2)
என் வாழ்வின் செல்வம் நீயாகுவாய்
இந்த ஏழையின் கனவும் நீயாகுவாய்
மன்னன் இன்று வந்த இரவில்

2. உந்தன் வரவால் மனம் பொங்கி மகிழும்
ஓயாத துன்பங்கள் எனை நீங்கிடும் (2)
நிலையான என் சொந்தமே மனம் நிறைவான என் பந்தமே (2)
என் மனக் கோட்டையில் பூவாகுவாய்
என் வாழ்வு மலர்ந்திட வழியாகுவாய்
மன்னன் இன்று வந்த இரவில்