கூடாரம் அது தேவனின் வாசஸ்தலம்

bookmark

தேவன் தங்கும் வாசஸ்தலம்

கூடாரம்  அது தேவனின் வாசஸ்தலம்
கூடாரம்  அது தேவ பிரசன்னத்தின் நிழலாட்டம்
 
திசையெங்கிலும் அது பரவிடும்
திருச்சபை விரைந்தே பெருகிடும்
தேவனின் ஜனத்தால் நிரம்பிடும்

1. அதன் திரைகள் நீண்டு விரியட்டும்
அதன் முனைகள் ஆழம் செல்லட்டும்
அகன்று ஆல்போல் தழைக்கட்டும்
அனைவரும் வந்தங்கு ஒதுங்கட்டும்
வானுலக ஆட்சியை விளம்பட்டும்

2. கடலதின் நீராய் திரளட்டும்
சுடர்விடும் ஒளியாய் வீசட்டும்
ஜாதிகள் தேவனைப் பணியட்டும்
சத்தியம் உலகை அசைக்கட்டும்
சத்துவம் அதனால் அதிரட்டும்

3. விசுவாசக் குடும்பங்கள் பலுகட்டும்
தம் சொந்த ஜனத்தை மீட்கட்டும்
இளைஞர்கள் எழுந்து செல்லட்டும்
சுவிசேஷம் அகிலத்தை வெல்லட்டும்
ஆண்டவர் மகிமை பெருகட்டும்