கிருபை தாரும் தேவனே

bookmark

கிருபை தாரும் தேவனே
தேவ கிருபை தாரும் தேவனே
 
1. பெலவீனத்தில் பெலன் என்றீர்
   என் கிருபை போதும் என்றீர்
   பரிசுத்த அபிஷேகம் தந்தீர்
   பந்தயத்தில் வெற்றி தந்தீர்       (கிருபை)
 
2. இரட்சண்ய நாட்களை தந்தீர்
   எல்லாமே இலவசம் என்றீர்
   நெருக்கத்தில் விடுதலை தந்தீர்
   நீதிமான் விழுவதில்லை என்றீர்    (கிருபை)
 
3. கிருபையும் அமைதியும் தந்தீர்
   கிறிஸ்துவுக்குள் பிழைத்திரு என்றீர்
   ஆத்தும பாரங்களை தந்தீர்
   அறுவடைக்கு புறப்படு என்றீர்     (கிருபை)
 
4. ஈசாயின் அடிமரம் என்றீர்
   எழுப்புதல் உன்னாலே என்றீர்
   ஊழிய கிருபையை தந்தீர்
   உலகத்தை கலக்கிடு என்றீர்      (கிருபை)