கிதியோன் வீரமாய் எழுந்தான்
உனக்கு இருக்கிற இந்த பெலத்தோடே போ
1. கிதியோன் வீரமாய் எழுந்தான் - அல்லேலூயா
கோத்திரத்திற்காக எழுந்தான் - அல்லேலூயா
பாத்திரம் தீவட்டி எக்காளம் - அல்லேலூயா
முன்னூறு பேர் கூட்டம்
வென்றனர்! வென்றனர்! கர்த்தர் சேனை வென்றனர்
ஜெயித்தார் இயேசுவே அவரே என்றும் ஜெயிப்பார்
2. பட்டயப் பழக்கம் அறியான் - அல்லேலூயா
ஜெபிக்க மட்டுமே அறிவான் - அல்லேலூயா
பெற்றான் கிதியோன் பட்டயம் - அல்லேலூயா
கர்த்தருடைய பட்டயம்
3. கர்த்தரின் பட்டயம் பெற்றால் இன்றே நீயே
கிதியோன் போலவே மாறுவாய் - உண்மை இதுவே
கிறிஸ்து இராஜாவின் யுத்தமே - தூய தூய
ஆவியால் மட்டும் ஆகுமே
4. அன்பின் இயேசுவே இராஜாவே - ஏழை எனக்கே
பெலனும் ஒளியும் அருளும் - வேண்டுகின்றேனே
எண் திசையிலும் இருளை - உம்மால் எதிர்த்து
பெறுவேன் நீதிக் கிரீடமே
5. சிலுவை வீரரே எழும்பும் - அல்லேலூயா
சிலுவை போராட்டம் துவங்கும் அல்லேலூயா
உலகின் திசைகள் எங்குமே - அல்லேலூயா
செல்லுவோம் அனுப்புவோமே!
