கர்த்தாவே, அடியாருக்கு
1. கர்த்தாவே, அடியாருக்கு
அடைக்கலம் நீரே
சகாயம் செய்யும்படிக்கு
எழுந்தருள்வீரே
O God, Our help in ages 2. உமது சந்நிதானத்தில்
மகிழ்ச்சி அடைவோம்
உமது கையை நீட்டுகில்
அஞ்சாமல் நடப்போம்
3. மலைகள் தோன்றும் முன்னமே
அகாதிகாலமாய்
சுயம்புவாய் இருந்தீரே
இருப்பீர் நித்யமாய்.
4. ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நளைப்போலாமே
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் நிமைக்கொப்பாமே
