ஒன்றுமில்லை நான்

bookmark

அன்பே பிரதானம்

ஒன்றுமில்லை நான் (2)
அன்பு எனக்கில்லா விட்டால் ஒன்றுமில்லை நான்

1. பலபல பாஷை படித்தறிந்தாலும்
கலகலவென்னும் கைம்மணியாமே
என்பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
அன்பு இல்லை என்றால் ஒன்றுமில்லை நான்

2. கண் கண்ட பிறனிடம் அன்புகூராதவன்
கண் காணா தேவனில் அன்புகூருவானோ?
விண்ணவர் மொழிதனைக் கற்றறிந்தாலும்
அன்பு இல்லை என்றால் ஒன்றுமில்லை நான்
   
3. சகலத்தையும் தாங்கிää சகலத்தையும் சகித்து
சகலத்தையும் விசுவாசித்து நம்பி
சாந்தமும் தயவும் பொறுமையுமுள்ள
அன்பு இல்லை என்றால் ஒன்றுமில்லை நான்.