என் மேய்ப்பரே இயேசையா

bookmark

என் மேய்ப்பரே இயேசையா
என்னோடு இருப்பவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் - (2)
 
 
1.   பசும்புல் மேய்ச்சலிலே
இளைப்பாறச் செய்கின்றீர்
 
2.   அமர்ந்த தண்ணீரண்டை
அநுதினம் நடத்துகிறீர்
 
3.   ஆத்துமா தேற்றுகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர்
 
4.   கோலும் கைத்தடியும்
தினமும் தேற்றிடுமே
 
5.   நீதியின் பாதையிலே
நித்தமும் நடத்துகிறீர்
 
6.   இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்
நடந்தாலும் பயமில்லையே
 
7.   ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்